/tamil-ie/media/media_files/uploads/2018/12/madhya-pradesh.jpg)
state bank of india yono sbi
எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான். நமக்கு கிடைக்கும் பணத்தை வங்கியில் சேர்த்து வைத்து அதை தேவைப்படும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் அடிப்படை மக்களுக்கு மினிமம் பேலன்ஸ் என்பது மிகப்பெரிய பிரச்சனை.
zreo balance account: ஜிரோ பேலன்ஸ் :
வங்கி குறிப்பிடும் தொகையை வாடிக்கையாளர்கள் மினிமல் பேலன்ஸாக அக்கவுண்டில் வைத்திருக்க வேண்டும். அபபடி இல்லையென்றால் வங்கி விதித்துள்ள கட்டணத்தொகையை செலுத்த வேண்டும்.
ஆனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இத்கைப்பற்றி இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் வெறும் ஜீரோ பேலன்ஸில் அக்கவுண்டை தொடர முடியும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அதே போல் தேவைப்படும் போது உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளாலாம்.
அந்த திட்டங்கள் என்னென்ன தெரியுமா?
1. டிஜிட்டல் சேமிப்பு கணக்கு :
எஸ்.பி.ஐ வங்கியின் YONO ஆப்பின் மூலம் இந்த கணக்கை தொடங்க வேண்டும். மார்ச் 31,2019 -ம் தேதி வரை கணக்கு திறக்கப்பட்டால், மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. ஒரே ஒருமுறை வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியது இருக்கும். பிளாட்டினம் டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.
2. இன்ஸ்டா சேமிப்பு கணக்கு:
தற்போது சிறப்பு ஆஃபர் மூலம் மார்ச் 31,2019 தேதிக்குள் கணக்கு தொடங்கினால் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்கிறது sbiyono.sbi. வங்கிக்கு செல்ல அவசியமில்லாமல் உடனடியாக கணக்கை தொடங்கி விடலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.
இதுத்தவிர மேலும் 3 திட்டங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உள்ளது. அதை குறித்து தெரிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..உங்களுக்காகவே 3 புதிய திட்டங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.