நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2023 உரையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) வைப்பு வரம்பு கணக்கு ஒன்றுக்கு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய நிலையான வைப்பு தொகை வட்டி விகித உயர்வு குறித்து பார்க்கலாம்.
எஸ்பிஐ மூத்த குடிமக்கள் நிலையான வைப்பு
எஸ்.பி.ஐ வங்கி 400 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீமை அறிமுகப்படுத்தி உள்ளது. எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
யூனிட்டி வங்கி
1001 நாள்கள் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக வைப்பு நிதிகளுக்கு யூனிட்டி ஸ்மால் வங்கி 9.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
பந்தன் வங்கி
600 நாள்கள் வரையிலான மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.5 சதவீதம் வட்டி பந்தன் வங்கி வழங்குகிறது.
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா</strong>
மூத்தக் குடிமக்கள் டெபாசிட்களுக்கு சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஜனா வங்கி
ஜனா ஸ்மால் வங்கி, மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சல மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு 8 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
மேலும் இந்தத் திட்டத்தில் 80சி வரி விலக்கும் கிடைக்கிறது.
இதையும் படிங்க : ஆர்.டி டெபாசிட்களுக்கு 9.5 சதவீதம் வட்டி.. இந்தப் பேங்க்-ஐ பாருங்க
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/