state bank of india atm rules : மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மிக பெரிய அறிவிப்பு இதோ. நீங்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மற்ற வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தவித அபராத கட்டணமும் இல்லை.
தற்போதைய நிலவரப்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கிகளில் ஏஎடிஎம்- களில் பணம் எடுத்து வருகின்றன. ஆனால் இனிமேல் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்த பட்ச தொகையாக வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் ரூ, 25000 மினிமல் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.
அதே போல் 1 லட்சம் அல்லது அதற்கும் மேல் மினிமல் பேலன்சை தொடர்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ இதோடு மட்டும் அல்லாமல் தன் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற பல சலுகைகளை அறிவித்துள்ளது.
Income tax கட்டும் போது போலி வீட்டு பில் கொடுத்தால் இதுதான் நடக்கும்!
state bank of india atm rules : இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்களுக்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராதம் விதிக்கப்படும்.