Advertisment

அக்கவுண்டில் ரூ. 5000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அபராதம் கட்ட தயாராகி விடுங்கள்!

நகர்ப்புற வங்கிகளில் முறையே சேமிப்பு கணக்கில் ரூ. 3000 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank

state bank

state bank of india minimum balance : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும்.

Advertisment

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அளவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகரித்துள்ளது. மெட்ரோபாலிடன் நகரங்களில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும். அதேமாதிரி காசோலை பெறவும் லாக்கரை பயன்படுத்தவும் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருப்பதோடு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு மாதமும் சேமிப்பு கணக்கில் இருப்பு தொகை சராசரியாக குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக இருக்க வேண்டும். சேமிப்பு கணக்கில் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைந்தால் மெட்ரோ நகரில் ரூ.100-ம் கிராமப்புறங்களில் இருக்கும் வங்கிகளில் ரூ.20-ம் அபராதம் விதிக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வெப்ஷெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே பெரியவங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவானது மெட்ரோ வங்கிகளில் மாதந்தோறும் சராசரியாக சேமிப்பு கணக்கில் ரூ.5000 இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் ரூ.50 முதல் ரூ.100 வரை விதிக்கப்படும். நகர்ப்புற வங்கிகள் மற்றும் செமி நகர்ப்புற வங்கிகளில் முறையே சேமிப்பு கணக்கில் ரூ. 3000 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம்.

அவசரமா லோன் வேணுமா? அப்போ இந்த ஆப்களை டவுன்லோடு பண்ணுங்க!

கிராமப்புற வங்கிகளில் சேமிப்பு கணக்கில் மாதம் சராசரியாக ரூ.1000 வரை இருப்பத்தொகை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.20 முதல் ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமர் தன்ஜன் யோஜனா கணக்குகளுக்கு பொருந்தாது.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment