state bank of india net banking : எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்துபவரா? நீங்கள் அப்படியானால் இதனை படியுங்கள்.
பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. இந்த வசதிகளுக்காக வங்கி வாடிக்கையாளர்களிடன் இருந்து குறிப்பிட்ட தொகையை உங்களிடம் இருந்து வசூலிக்கின்றன.
நெட் பேங்கிங் என்றாலே அதில் ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறை வசதிகள் இருக்கும். இந்த முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் கட்டணம் வசூலிக்கும். அந்த கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்த பகிர்வில் எஸ்.பி.ஐ வங்கி நெட் பேங்கி சேவைக்கு உங்களிடம் வசூலிக்கும் தொகை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இதைவிட என்ன குட் நியூஸ் சொல்ல முடியும்
1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.
2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.
3. நெஃப்ட் (NEFT)>
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 2.5 ரூபாய் + 1 ரூ ஜி.எஸ்.டி தொகை.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + 2 ரூ ஜி.எஸ்.டி தொகை. 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + 3 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படுகின்றன. 5 லட்சத்திற்கும் மேலான பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை வசூலிக்கப்படும்.