state bank of india net banking : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ அறிவிப்பு:
பொதுத்துறை வங்கிகளில் மக்களால் அதிகம் விரும்பப்படும் வ்ங்கியாக உள்ள எஸ்பிஐ வங்கி நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுபுது திட்டங்களை அறிவித்து வருகிறது.
சமீபத்தில் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தியது, மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை குறைத்தது, மினிமம் பேலன்ஸ் இல்லாத 5 புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது என் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில்,நேற்றைய தினம் மற்றொரு அறிவிப்பு ஒன்றையில் எஸ்பிஐ அறிவித்துள்ளது. ரூ.25,000க்கும் அதிகமாக வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவருக்கு ஏடிஎம்-இல் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை(Unlimited Transaction) வழங்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தவிர எஸ்பிஐ வங்கியில் பணபரித்தவர்த்தனையில் மற்றியமைக்கப்பட்ட சிறம்பு அம்சங்கள்.
1. ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
2. மெட்ரோ நகரங்களில் வழக்கமாக ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக்கொள்ளலாம்.
3. மெட்ரோ அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
தெரிந்துக் கொள்ளுங்கள்… எஸ்பிஐ புதிய வட்டி விகிதம் தெரியுமா?
4, இந்த விதிமுறையைத் தாண்டி அதிக முறை பணம் எடுத்தால் மட்டுமே ரூ. 5 முதல் ரூ.20 வரை + ஜிஎஸ்டி அபராத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
read more.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி!
5. வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருப்பவருக்கு எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.