state bank of indian loan interest : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இவ்வாறு எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதங்களைக் குறைப்பது இதோடு 14ஆவது முறையாகும்.
Advertisment
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் குறைத்துள்ளது.
எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதங்கள் 0.05 முதல் 0.10 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய வட்டி விகிதங்களின்படி, 3 மாத காலத்துக்கான எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு 6.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 6.70 சதவீதமாக இருந்தது. அதேநேரம் 6 மாதம், 1 வருடம், 2 வருடம், மற்றும் 3 வருட எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டிக் குறைப்பால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதங்கள் அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மட்டுமே குறையும்.
இந்த வட்டிக் குறைப்பால் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். இந்திய வங்கிகளின் எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதங்களிலேயே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வட்டி விகிதம்தான் மிகக் குறைவு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil