Advertisment

பத்திரப்பதிவு முறையில் முக்கிய மாற்றம் - இனி 'போலி ஆவணம்' எனும் பேச்சுக்கே இடமில்லை!

Recent Changes In Land Registration Procedure : நில பரிவர்த்தனைக்கான பதிவுக்கு முன்பு நில உரிமையாளர்கள் ஆன்லைன் பட்டா பெறவில்லை எனில் "பிரி மியூட்டேசன் ஸ்கெச்" என்ற புலப்படங்களின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu new Land Registration Rules

Tamil Nadu Land Registration New Rules : போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடப்பதை தடுக்க தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர எழுத்தர்களும், நிலத்தரகர்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடப்பதை தடுக்க நான்கு தாலுகாக்களில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பத்திர எழுத்தர்கள் மீதான புகார்கள் பதிவுத்துறையின் கவனத்திற்கு தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பத்திர எழுத்தர்கள் பத்திரங்கள் தயாரிப்பதற்கான கட்டண ரசீதை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்: பூனையை நாடு கடத்த 'PETA' எதிர்ப்பு

கட்டண ரசீதுடன் பத்திரம் தாக்கல் செய்யப்படுவதை பதிவு அலுவலர்கள் உறுதி செய்த பின்பே, பத்திர பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

பத்திர எழுத்தர்கள் பொதுமக்களுக்கு கொடுக்கும் அந்த கட்டண ரசீதின் நகலை, பதிவு அலுவலர்கள் அந்தந்த பத்திரங்களுடன் சேர்ந்து அலுவலக கோப்பில் வைத்து பராமரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பத்திர எழுத்தர்களும், நிலத்தரகர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழையக் கூடாது என்ற நெறிமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டுமென பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தவிர்ப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் இவர்கள்தானா ? பரபரக்கும் அரசியல் களம்

அதன்படி, படி நில பரிவர்த்தனைக்கான பதிவுக்கு முன்பு நில உரிமையாளர்கள் ஆன்லைன் பட்டா பெறவில்லை எனில் "பிரி மியூட்டேசன் ஸ்கெச்" என்ற புலப்படங்களின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்ட பின் 30 நாட்களுக்குள் உரிய தகுதி இருந்தால் மட்டும் அந்த புலப்படம் தரப்படும். இந்த பத்திரப் பதிவுக்கு முன்பான உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறையை, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், சோழகிரி ஆகிய தாலுகாக்களிலும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களிலும் சோதனை முறையில் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment