பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் (public provident fund (PPF)) சேர்வதன் மூலம் 80 சி பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு சலுகை இருப்பதால், பலர் இந்த திட்டத்தில் சேர தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
PPF குறித்த சில அடிப்படையான அதே சமயம் முக்கியமான விஷயங்கள் உங்களுக்காக…
பொது வருங்கால வைப்பு நிதி ( PPF) திட்டத்தில் நாம் தனியாகவோ, அல்லது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாவலராகவோ இணையலாம். பாதுகாவலராக இணைய விரும்புபவர்கள் படிவம் 1 பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை ஒரு நிதியாண்டில் செலுத்தலாம். தனிநபர் கணக்கு என்றாலும் சரி, அல்லது கார்டியனாக உள்ள கணக்குகளுக்கும் இந்த விகிதாச்சாரம் பொருந்தும்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்ட( PPF) பயனாளர்களா நீங்க? அதிரடி மாற்றங்களுக்கு ஏற்ப தயாராவீர்…
இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு 5 ஆண்டுகளுக்கு பிறகே, நாம் பணத்தை திரும்ப எடுக்க முடியும். ஒருவேளை, நாம் வேறு இடம் மாறிப்போனால் மட்டுமே, முன்கூட்டியே பணத்தை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
உங்கள் வரிப் பணத்தை மிச்சப்படுத்தும் 5 சிறப்பு திட்டங்கள் இதோ!
திட்டத்தில் சேர்ந்த பாதியிலேயே பிரீமியம் செலுத்துவதை நிறுத்தும் பட்சத்தில் முதிர்வு காலத்தின்போதும், கட்டத்தவறிய பிரீமியத்துக்கு ரூ.50 வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.
முதிர்ச்சி காலத்துக்கு பிறகும் டெபாசிட் சாத்தியமா? : 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் ஆட்டோமெட்டிக் ஆக கணக்கு முதிர்ச்சியடையும். அதற்குப்பிறகும் தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்ய விரும்புபவர்கள், படிவம் 4யை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த வழிமுறையை பின்பற்ற நினைப்பவர்கள் முதிர்ச்சிகாலத்திற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் நாம் சேர்த்து வைத்துள்ள பணம், நாம் பெற்றுள்ள கடனை அடைக்கவோ அல்லது மற்ற திட்டங்களிலோ இணைக்கப்பட மாட்டாது என்று குறிப்பிடத்தக்கது.