Advertisment

கல்விக் கடனில் வருமான வரி சலுகைகள் - நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

Tax Benefits on Education Loan, All you need to know : குழந்தைகளின் கல்வி கட்டணம் மீது வரிச் சலுகைகளைப் பெற அவர்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவனம் இந்தியாவில் இருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tax Benefits on Education Loan

Tax Benefits on Education Loan

Tax Benefits on Education Loan: கல்விக்கான கட்டணம் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வரும் நிலையில் இடைநிலை கல்வி மற்றும் உயர் கல்விக்கு பெரும்பாலான மக்கள் இப்போது தேர்ந்தெடுப்பது கல்வி கடனைதான். கல்வி கடன் வாங்குபவர்களுக்கு கூடுதல் நன்மையாக வருமான வரி சட்டம் பிரிவு 80 E இன் கீழ் வருமான வரி சலுகைகளும் இதன் மூலம் கிடைக்கிறது. இந்தியாவில் இரண்டு பிள்ளைகள் வரை உள்ள பெற்றோர் கல்லூரி, பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவன கல்வி கட்டணங்கள் (tuition fees) கட்ட கடன் வாங்கி இருந்தால் வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

Advertisment

ரிலையன்ஸ் ஜியோ 'வாவ்' அறிவிப்பு - மீண்டும் வருகிறது ரூ.4,999 வருடாந்திர திட்டம்

ஒரு நிதியாண்டில் வரிகடனை கணக்கிடும் போது, வருமான வரி சட்டத்தின் கீழ் கிடைக்கும் பல்வேறு வரி விலக்குகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tax benefits on interest paid:

கல்வி கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு வரி சலுகைகளை கல்வி கடன் வாங்கியவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடன் வாங்கியவர்கள் இந்த பயனை தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ, மனைவிக்கோ அல்லது தாங்கள் காப்பாளராக உள்ள ஏதாவதோரு குழந்தைக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிஸான் கடன் அட்டை எச்சரிக்கை: காலக்கெடுவுக்கு பிறகு என்ன நடக்கும் தெரியுமா?

Payment of tuition fee of children

கடன் வாங்கியவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்வி கட்டணத்தின் மீதான வரிச் சலுகையை பெற, எந்த course க்காக கல்வி கடன் பெறப்பட்டுள்ளதோ அது முழு நேர course ஆக இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளின் கல்வி கட்டணம் மீது வரிச் சலுகைகளைப் பெற அவர்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவனம் இந்தியாவில் இருக்க வேண்டும்.

Exempt allowance

இந்த சலுகையை மாத சம்பளதாரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் ஆகிய இரு பிரிவினரும் பெறலாம். வேலைக்கு அமர்த்துபவரிடம் இருந்து பெறப்படும் கல்விக்கான சலுகை மாதத்துக்கு 100 ரூபாய் வரை இரண்டு குழந்தைகளுக்கு பள்ளி விடுதி சலுகையாக ரூபாய் 300 சேர்த்து விலக்கு அளிக்கப்படும். மேலும் சம்பளம் வாங்குபவர்களுக்கு அவர்களின் முதலாளியிடம் இருந்து கிடைக்கும் சில சலுகைகள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment