TVS Motor Company,TVS salary cuts,TVS pay cut,TVS Motor Company salary, டிவிஎஸ் நிறுவனம், வணிக செய்திகள், டிவிஎஸ் ஆட்குறைப்பு,
TVS: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இன்னமும், வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் பிரபல இரு சக்கர வாகன நிறுவனமான டிவிஎஸ் ஊழியர்களுக்கான சம்பள குறைப்பை அறிவித்துள்ளது.
Advertisment
லாக்டவுன் காரணமாக, வாகன உற்பத்தி நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்நிறுவனம் 2020 மே மாதம் முதல் 2020 அக்டோபர் வரை தனது அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியக் குறைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சியின் விளைவாக ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுளள்து.
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் ஆறு மாத காலத்திற்கு (2020 மே முதல் அக்டோபர் வரை) வெவ்வேறு நிலைகளில் தற்காலிக சம்பளக் குறைப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் மட்டத்தில் சம்பளம் குறைப்பு இருக்காது.
இருப்பினும், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் மட்டத்தில் 5 சதவீத சம்பளக் குறைப்பு மற்றும் மூத்த நிர்வாக மட்டத்தில் சுமார் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை சம்பள குறைப்பு இருக்கும். ஊழியர்கள் தாமாக முன்வந்து சம்பளக் குறைப்பை பெற முன்வருவதை நிறுவனம் வரவேற்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2020 இல் 55 சதவீத விற்பனை சரிவுக்குப் பிறகு, ஏப்ரல் 2020ல், டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் பூஜ்ஜிய விற்பனையை பதிவு செய்தது.
உள்நாட்டு இரு சக்கர வாகன சந்தையில் மட்டும், 2020 மார்ச் மாதத்தில் விற்பனையில் டி.வி.எஸ் 62 சதவீதம் சரிவைக் கண்டது. லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலில் மார்ச் 23 முதல் தமிழ்நாட்டின் ஓசூரில் டிவிஎஸ் நிறுவனத்தின் உற்பத்தி வசதி மூடப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil