Uber Sells Food Delivery Business to Zomato : ஸோமாட்டோவுக்கு கைமாறும் உபர் ஈட்ஸ். இந்தியாவில் இயங்கிவரும் உபர் ஈட்ஸ் தங்களுடைய உணவு ஆர்டர் பிஸினஸை ஸோமாட்டோவுக்கு விற்பனை செய்யும் முடிவுற்கு வந்துள்ளது. உபர் ஈட்ஸ் தங்களுடைய வாடிக்கையாளர்கள், அவர்களின் மொபைல் எண்கள், ஆர்டர் ஹிஸ்டரி என அனைத்தையும் ஸோமாட்டோவிற்கு கைமாற்ற உள்ளது. உபர் ஈட்ஸ் வாடிக்கையாளர்கள் ”கெட் ஃபுட் டெலிவரி” என்ற பட்டனை க்ளிக் செய்தால் அது ஸோமாட்டோவிற்கு மாற்றி அனுப்பப்படும். வருகின்ற ஆறு மாதத்திற்கு உபர் ஈட்ஸ் இந்த நிலையில் தான் இயங்கும்.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
கடந்த ஆண்டு முதலீட்டளார்களிடம் இருந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகிறது உபர் நிறுவனம். இந்த அழுத்தத்தை சரி செய்து, பிஸினஸை லாபகரமாக மாற்ற விலைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மே மாதம் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. உபர் ஈட்ஸ் இந்தியாவிற்கு வந்த போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. ஆனால் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த துறையில் இருக்கும் போட்டியால் பல்வேறு இன்னல்களை சந்தித்தது உபர் ஈட்ஸ். மேலும் மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பினை தக்கவைக்க பல்வேறு ப்ரொமோசன்களுக்காக நிறைய முதலீடு செய்தது அந்நிறுவனம்.
உணவு டெலிவரி பிஸினஸை மட்டுமே உபர் ஸோமாட்டோவிற்கு தருகிறது. ஆனால் ரைடிங் பிஸினஸில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. தொடர்ந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் ஸோமாட்டோ மற்றும் ஸ்விகி இரண்டும் 80% வாடிக்கையாளர்களை தங்கள் வசம் கொண்டுள்ளது. உபரின் உதவியால் தற்போது ஸோமாட்டோ மேலும் மாதத்திற்கு 10 மில்லியன் புதிய டெலிவரிகளை மேற்கொள்ளும். இதனால் கொஞ்சம் இந்தியாவில் ஸோமாட்டோவின் பலம் அதிகரிக்கும்.