பி.எம் கிசான் 17வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என பயனாளிகள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜூன் 4ஆம் தேதிக்கு பின்னர் பணம் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு உடன் தொடங்கியது.
இந்த நிலையில் 7ம் கட்ட மற்றும் நிறைவு கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : ரூ.10 லட்சம் வரை வருமான வரி கட்டத் தேவை இல்லை: பணத்தை இப்படி சேமிங்க!
இதற்கிடையில் பி.எம். கிசான் திட்ட பயனாளிகளில் உதவித்தொகை இன்னமும் வரவு வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நான்கு மாதத்துக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை வழங்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் திட்டத்தின் 17வது தவணை ஜூன் 4ஆம் தேதிக்கு பின்னர் வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பி.எம் கிசான் திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை pmkisan.gov.in என்ற இணைய முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“