எஸ் வங்கி நெட்பேங்கிங் சேவைகளை அணுக முயற்சிக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் நேற்றிரவு முதல் ஒரு மோசமான நேரத்தை அனுபவித்து வருகின்றனர், ஏனெனில் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வங்கியின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் நிதியை மாற்றவோ அல்லது அவர்களின் கணக்கு நிலுவை சரிபார்க்கவோ சிரமப்படுகிறார்கள்.
வாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான ‘Yes Bank’ கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால், ஆன்லைன் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட தங்க ரதம் ரயில் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
நிதியை மாற்ற யுபிஐ சேவைகளைப் பயன்படுத்துபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“அன்புள்ள வாடிக்கையாளரே, எங்கள் நெட் பேங்கிங்கில் அதிக போக்குவரத்து இருப்பதால், உங்கள் கோரிக்கையை தற்காலிகமாக செயல்படுத்த முடியவில்லை. தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது உங்கள் பரிவர்த்தனைகளைச் செய்ய YES மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்" என்று வங்கியின் ஆன்லைன் பக்கத்தில் ஒளிபரப்பாகிறது.
"ஹாய், ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நெட் பேங்கிங்கில் இடைப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று எஸ் வங்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
ஏடிஎம்களை முயற்சிப்பவர்களும் துரதிர்ஷ்டவசமே காத்திருந்தது. ஏனெனில் பணத்தை விநியோகிக்கும் இயந்திரங்கள் நீண்ட வரிசைகளைக் கொண்டிருந்தன. இப்போது அதிலிருந்து பணமும் எடுக்க முடியவில்லை.
கோ ஏர் விற்பனை 2020 - கோடை காலத்தில் ஒரு ஜாலி ட்ரிப்; ரூ.995 முதல்
இன்று (மார்ச்.6) காலை முதலே எஸ் வங்கியின் எந்த ஏடிஎம்-மிலும் பணம் எடுக்க முடியவில்லை. மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் பணத்தை எடுக்க முடியவில்லை.
"ரிசர்வ் வங்கி ரூ.50,000 வரம்பை விதித்தது அதிர்ச்சியாக இருந்தது. நான் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்தேன், ஆனால் அவை எஸ் வங்கியால் தடுக்கப்பட்டன. நெஃப்ட் பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை. பணத்தை எடுக்க நான் காலை 7 மணிக்கு இங்கு வந்தேன்," என்று மும்பையின் ஃபோர்ட் கிளையில் எஸ் வங்கி வாடிக்கையாளர் யோகேஷ் சர்மா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”