12th Exam malpractice, students banned, plus two Exam malpractice
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு பணிகளை கண்காணிக்க 31 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்தது.
Advertisment
தேர்வு நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். வினாத்தாள்களைப் வாசிக்க மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
மேலும், தேர்வில் காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும், அவ்வாறான செயல்கள் கண்டறிந்தால், மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுக்கு அரசு தேர்வெழுத தடை விதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
Advertisment
Advertisements
இந்நிலையில், நேற்றைய தேர்வில் சென்னை மற்றும் வேலூரில் தேர்வு எழுதிய 11 தனித்தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 11 தனித்தேர்வர்களும் பொதுத்தேர்வு எழுத தடை விதித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.