Advertisment

9 லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு: பிளஸ் டூ ரிசல்ட் வெளியாகியது!

Plus two result 2020 latest news: பிளஸ் ஒன் தேர்வு முடிவும் எப்போது வெளியாகும் என திட்டவட்டமாக அரசு அறிவிப்பது நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN HSC Plus One Result 2018 Live Updates

12th result

Tamil Nadu 12th Result: பிளஸ் டூ ரிசலட் இன்று(16.7.20) வெளியாகியது.  மார்ச்சில் நடந்த 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பொறியியல் கலந்தாய்வில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய நிலையில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது 

Advertisment

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழ்நாட்டில் 9 லட்சம் மாணவர்கள் தவித்துகொண்டு இருந்தார்கள். . ஜூலை 7-ம் தேதி வெளியாவதாக கூறப்பட்ட தேர்வு முடிவுகள் அப்படி வெளியாகவில்லை. என்ன குழப்பம்? ஏன் தாமதம்?

அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ‘மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்த

அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும்

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இதையடுத்து பிளஸ் டூ ரிசல்ட் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது. தவறவிட்ட தேர்வு முடிந்து, அந்த விடைத்தாள்களை திருத்தி, அதன் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது தெளிவாகியிருக்கிறது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை கடந்த சில மாதங்களில் பலமுறை தனது அறிவிப்புகளை தானே மாற்றிக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றாக பிளஸ் டூ தேர்வு முடிவும் அமைந்திருக்கிறது.

Tamil Nadu 12th Results Tamil Nadu 12th Results

12th Result, Tamil Nadu plus two result 2020 latest news: +2 தேர்வு ரிசல்ட்

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என ஜூன் 19-ம் தேதி கோபியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். எனவே ஜூன் 6 அல்லது 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என மாணவ மாணவிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இதற்கேற்ப இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் சார்பில் ஜூலை 7-ம் தேதி காலையில் பள்ளிக் கல்வித் துறையை தொடர்பு கொண்டு கேட்டபோது, மாலை 5 மணிக்கு தேர்வு முடிவு வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவ மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பிளஸ் டூ தேர்வின் போது ஊரடங்கு காரணமாக கடைசித் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 35,000 மாணவ மாணவிகள் எழுதவில்லை. அவர்களுக்கு இப்போதைக்கு தேர்வு வைப்பதற்கான வாய்ப்பு தெரியவில்லை. எனவே தேர்வு எழுதியவர்களுக்கு ரிசல்டை அறிவித்துவிட்டு, பிறகு இவர்களுக்கு தேர்வு வைக்கலாம் என முதலில் கல்வித்துறை ஆலோசித்தது. அந்த அடிப்படையிலேயே ஜூலை முதல் வாரம் என அமைச்சர் செங்கோட்டையன் நாள் குறித்தார்.

ஆனால் அப்படி இரு முறையாக ரிசல்ட் வெளியிடுவது பொருத்தமாக இருக்காது என அதிகாரிகளில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். எனவே மேற்படி 35,000 பேருக்கும் தேர்வை முடித்துவிட்டு, பிறகு ரிசல்ட் வெளியிடலாம் என்கிற கருத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த கருத்து பேதங்கள் காரணமாக பிளஸ் டூ ரிசல்ட் தாமதமாகிறது.

இது குறித்து கல்வித்துறை தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட்டால், மாணவ மாணவிகள் மத்தியில் நிலவும் குழப்பம் முடிவுக்கு வரும். அதேபோல பிளஸ் ஒன் தேர்வில் வேதியியல் தேர்வு மட்டும் நடத்தப்படவில்லை. அந்தப் பாடத்திற்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மார்க் கணக்கிடப்படும் என தெரிகிறது. பிளஸ் ஒன் தேர்வு முடிவும் எப்போது வெளியாகும் என திட்டவட்டமாக அரசு அறிவிப்பது நல்லது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டு திட்டவட்டமாக நடத்தும் கல்வித்துறை, பள்ளித் தேர்வுகளில் இந்தத் தேதி குழப்பத்தை தவிர்க்கலாமே? என்பதுதான் பலரது குரலாக இருக்கிறது. அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பான தெளிவான அறிவிப்புக்கு நடவடிக்கை எடுப்பாரா?

ஜூலை 27-ல் கடைசித் தேர்வு: பிளஸ் டூ ரிசல்ட் இப்போது இல்லை

அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ‘மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்த

அரசு முடிவு செய்துள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும்

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இதையடுத்து பிளஸ் டூ ரிசல்ட் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது. தவறவிட்ட தேர்வு முடிந்து, அந்த விடைத்தாள்களை திருத்தி, அதன் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது தெளிவாகியிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

 

Tamil Nadu School Education Department Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment