நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கான அரசு இலவச பயற்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

By: Updated: January 23, 2020, 11:04:37 AM

NEET Exam Free Coaching classes : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரைவில் நீட் சிறப்பு வகுப்பு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவத்துள்ளார்.

2020-21 ஆண்டு நீட் தேர்வு: 

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை பெறப்பட்டன.

15 லட்சத்திற்கும் அதிகமான மானவர்கள இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 2018-19 நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தின் உயிரியல் வீடியோ தொகுப்பு:

மேலும் விவரங்களுக்கு


தமிழ்நாடு நீட் தேர்வு இலவச பயற்சி மையம்: 

ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக  இலவச நீட் தேர்வு பயற்சி மையங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு நடத்த்திவருகிறது.

நீட் தேர்வு: எவ்வாறு படிப்பது ? வல்லுனர்களின் பதில்கள் இங்கே

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 400க்கும் மேற்பட்ட பயற்சி மையம் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயற்சி அளிக்கப்பட்டது.

40 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பயற்சி கொடுக்கப்பட்டாலும் கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெறும்  7 மாணவர்கள் மட்டும்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்ற விமர்சனங்களும் தமிழக அரசு பயிற்சி மையங்கள் மீது தொடுக்கப்படுகின்றன.

நீட் 2020 : நுழைவுத் தேர்வுக்கு ஈஸியா ரெடியாவது எப்படி?

இதனால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு பயற்சி மையங்களில் சேருவதற்கு தனியான தகுதி தேர்வை நடத்தி, அதில் வெற்றி பெரும் மானவர்களுக்கு மட்டும் பயற்சி வழங்கப்படும் என்று அறிவித்தது தமிழக அரசு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதி தேர்வின் மூலம் 20,000 மாணவர்களை தேர்ந்தடுத்தது. எனினும் , அவர்களுக்கான நீட் தேர்வு பயற்சி எதுவும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

நீட் இலவச பயற்சி திட்டத்தை கைவிட தமிழக அரசு யோசனை

பொதுவாக, ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த நீட் தேர்வு பயற்சி வகுப்புகள், இன்னும் தொடங்கப்படாதது மாணவர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்கள் நடத்தும்  நீட் தேர்வு மையங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரையில் மாணவர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டுவருகிறது.

நீட் தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. நன்கு சிந்தித்து பார்த்தோமானால், இந்த  மூன்று மாதங்களும் மாணவர்கள் தங்கள் பொது தேர்வுக்கு தான் அதிக முக்கியத்தும் கொடுப்பார்கள். நீட் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவர்கள் மனதளவில் இருந்தாலும், நடைமுறையில் அவர்களுக்கான முத்தங்கள் மற்றோருவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.

நீட் தேர்வு:  அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்துமாறு 1956ன் இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ எம் சி) சட்டம் பிரிவு 10 (டி) குறிப்பிடுகிறது. இதன்படி 2016-17 கல்வியாண்டிலிருந்து நீட் அறிமுகம் செய்யப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:2020 21 neet exam coaching classes will begin soon says k a sengottaiyan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X