Tamil Nadu School Education Department | தமிழக பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 3 திட்டங்கள் அமலாகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தத் திட்டங்கள், பெற்றோர்களுக்கான வாட்ஸ்அப் திட்டம், கைகளில் வண்ணக் கயிறுகள் அணியத் தடை உள்ளிட்ட 3 திட்டங்கள் ஆகும்.
தொடர்ந்து, பள்ளிகளில் போதைப் பொருள நடமாட்டத்தை முழுமையாக தடுக்கவும் புதிய உத்தரவுகள் அமலுக்கு வரவுள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து முதமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனையும் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் இடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும், பள்ளி வளாகத்தில் போதைப் பொருள் அதிகம் நடமாட்டம் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மேலும், பள்ளி பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பும் திட்டமும் உள்ளது.
இது மட்டுமின்றி மாணவ- மாணவிகள் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்ட தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏனெனில் தென் மாவட்டங்களில் இந்தக் கயிறு கட்டும் கலாசாரம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் இடையே சாதிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க : அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“