scorecardresearch

695 பல்கலைக்கழகங்கள், 34,734 கல்லூரிகள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை; மத்திய அரசு

நாடு முழுவதும் 1113 பல்கலைக்கழகங்கள் மற்றும் 43,796 கல்லூரிகள் உள்ளன, அவற்றில் 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகள் மட்டுமே NAAC அங்கீகாரம் பெற்றுள்ளன

பல்கலைக்கழக மானியக் குழு (எக்ஸ்பிரஸ் புகைப்படம் பிரவீன் கன்னா/ கோப்புபடம்)
பல்கலைக்கழக மானியக் குழு (எக்ஸ்பிரஸ் புகைப்படம் பிரவீன் கன்னா/ கோப்புபடம்)

நாடு முழுவதும் உள்ள 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகள் மட்டுமே தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சகம் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்ட உயர்கல்வி அறிக்கை 2020-21க்கான அகில இந்திய கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 1,113 பல்கலைக்கழகங்களும் 43,796 கல்லூரிகளும் உள்ளன. மொத்தம் 695 பல்கலைக்கழகங்கள் மற்றும் 34,734 கல்லூரிகள் இன்னும் NAAC அங்கீகாரத்தைப் பெறவில்லை.

இதையும் படியுங்கள்: அமெரிக்க தேசிய பொறியியல் அகாடமி; சர்வதேச உறுப்பினராக ஐ.ஐ.டி மெட்ராஸ் பேராசிரியர் தேர்வு

பா.ஜ.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார், தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் (HEIs) அடுத்த 15 ஆண்டுகளுக்குள் மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.

இந்தியாவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையமான NAAC ஆல் அங்கீகாரம் பெறுகின்றன.

அனைத்து கல்வி நிறுவனங்களையும் அங்கீகார முறையின் கீழ் கொண்டு வர, மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்திற்கான கட்டணத்தை NAAC கணிசமாகக் குறைத்துள்ளதாக யு.ஜி.சி தெரிவித்துள்ளது. இணைந்த அல்லது உறுப்புக் கல்லூரிகளுக்கான சுய ஆய்வு அறிக்கைக்கான கையேட்டில் உள்ள அளவீடுகள் அல்லது கேள்விகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: 695 universities 34734 colleges yet to receive naac accreditation ministry data

Best of Express