scorecardresearch

யு.ஜி.சி தலைவரை சந்தித்த ஏ.பி.வி.பி குழு: உயர்கல்வி கவுன்சலிங்- தேர்வு நடைமுறையில் முக்கிய மாற்றத்திற்கு கோரிக்கை

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) மற்றும் கவுன்சிலிங் ஆகியவற்றிற்கு தனித்தனியாக பதிவுக் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்; யு.ஜி.சி தலைவரிடம் ஏ.பி.வி.பி கோரிக்கை

CUET
CUET தேர்வு

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) பிரதிநிதிகள் தில்லியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமாரை சந்தித்து, பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) மற்றும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கவுன்சிலிங் ஆகியவற்றிற்கு தனித்தனியாக பதிவுக் கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மீதான நிதிச் சுமை அதிகரிப்பு குறித்த பிரச்சினையை எழுப்பினர்.

முழு செயல்முறைக்கும் மாணவர்களிடம் ஒருமுறை கட்டணம் வசூலிப்பதன் மூலம் செயல்முறையை எளிமைப்படுத்தவும், நிதிச் சுமையை குறைக்கவும் ABVP குழு கோரிக்கை விடுத்தது. ஒரு செய்திக்குறிப்பில், “ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.,களுக்கு எப்படிப் பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறதோ, அதேபோல CUET-ன் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பொதுவான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என்று ABVP கோரியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: 6-8 வகுப்புகளுக்கு கோடிங், AI பாடங்கள்; மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்த்த சி.பி.எஸ்.இ

கூடுதலாக, தேசிய தேர்வு முகமையின் (NTA) தேர்வுகள் அரசு மற்றும் நம்பகமான மையங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், CUET தேர்வுக்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ABVP கோரியது.

மேலும், CUET தேர்வின் போது மாணவர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்கக்கூடாது என்றும், எனவே, NTA முன்கூட்டியே தேவையான அனைத்து தயாரிப்புகளையும் செய்ய வேண்டும் என்றும் ABVP கோரியது.

“CUET தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள், எனவே கவுன்சிலிங் செயல்முறையை எளிதாக்குவதன் மூலம் சேர்க்கை செயல்முறையை எளிதாக்குவது அவசியம். மாணவர்களின் நிதி வசதியை உறுதி செய்வதற்காக முழு சேர்க்கை செயல்முறையின் போது ஒருமுறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். தேர்வுகளில் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக சேர்க்கைக்கான பொதுவான கவுன்சிலிங் செயல்முறை மாணவர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும்,” என்று ஏ.பி.வி.பி தேசிய பொதுச் செயலாளர் யாக்யவல்கியா சுக்லா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Abvp delegation meets ugc chairman demands common counselling for cuet ug admissions

Best of Express