scorecardresearch

ஏர் இந்தியா வேலை வாய்ப்பு; சென்னையில் 309 காலியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவன வேலைவாய்ப்பு; சென்னையில் 309 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஏர் இந்தியா வேலை வாய்ப்பு; சென்னையில் 309 காலியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 309 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: சென்னை சித்தா ஆராய்ச்சி மைய வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Customer Service Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 144

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 23,100

Utility Agent cum Ramp Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,350

Handyman

காலியிடங்களின் எண்ணிக்கை : 150

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,520

வயதுத் தகுதி:  28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:

Customer Service Executive: 12.11.2022 & 13.11.2022

Utility Agent cum Ramp Driver: 14.11.2022

Handyman: 15.11.2022 & 16.11.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of the HRD Department, Air India Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600043

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aiasl.in/resources/AIASL%20Walk-in-Interview_Advt_Nov_2022_Chennai_31Oct22.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Air india services recruitment 2022 for 309 jobs details here