சாஃப்ட்வேர் எஞ்சினியரா நீங்கள் ? உங்களைத் தான் அமேசான் தேடிக் கொண்டிருக்கிறது…

பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளது

By: January 18, 2019, 12:45:21 PM

Amazon E-Commerce recruitment 2019 : பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம் புதிய வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை அளித்துள்ளது. பெங்களூரில் 650 பணியிடங்களும், ஹைதராபாத்தில் 450 பணியிடங்களும் காலியாக உள்ளன. அதே போல் கூர்கானிலும் சில பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

Amazon E-Commerce recruitment 2019

இந்தியாவில் பலரின் நம்பிக்கையை பெற்ற இணைய வர்த்தக நிறுவனமான அமேசானில் அடுத்த மாதத்தில் இருந்து ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் சுமார் 1400 காலியிடங்கள் உள்ளது. தென்னிந்தியாவில் 1000 இடங்கள் காலியாக உள்ளது. மென்பொருள் பொறியாளர்களுக்கு அதிக அளவு வேளை வாய்ப்பு அமேசானில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர், ஹைதராபாத்தினை தொடர்ந்து சென்னை, மும்பை, மற்றும் கூர்கான் போன்ற நகரங்களிலும் தங்கள் நிறுவனத்தின் பலத்தை அதிகமடைய செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது அமேசான்.  ரீட்டைல், மார்க்கெட் ப்ளேஸ், அட்வெர்டைஸிங், மற்றும் இணைய சேவைகளுக்கு தொடர்ந்து ஆட்களை வேலைக்கு எடுத்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க : மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்ற விருப்பமா ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Amazon e commerce recruitment 2019 1400 vacancies across india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X