/tamil-ie/media/media_files/uploads/2020/12/anna-university-1200-1.jpg)
Anna University warns not to fall prey to touts
மாணவர்கள் வரும் காலங்களில் தங்களது யோசனைகளை முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்யும் வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழக வளாகம் ஏற்படுத்தியுள்ளது.
3 டி பிரிண்டர், லேசர் கட்டிங் மெஷின், டிசி எலக்ட்ரானிக் லோட், கலப்பு சிக்னல் அலைக்காட்டி, ஏர் கம்ப்ரசர்கள், சிமுலேஷன் கருவிகள், ட்ரோன்கள் உள்ளடக்கிய நியூ மேக்கர்ஸ் ஆய்வகத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது.
உடனடி வேலைவாய்ப்பைத் தரும் ஆன்லைன் கோர்ஸ்: சென்னை பல்கலைக்கழகம் திட்டம்
இந்த நியூ மேக்கர்ஸ் ஆய்வகம் டிஜிட்டல் ஃபேப்ரிகேஷன், 3 டி பிரிண்டிங், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் உள்ளிட்டவற்ற மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேஇஇ மெயின் தேர்வு: கடைசி நேர தயாரிப்புக்கு உதவும் புத்தகங்கள் பட்டியல்
புத்தாக்க அடிப்படையிலான தொழில்துறையை ஊக்குவிக்கவும், பல்துறை தலைமைப்பண்பை உருவாக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
இளம் மாணவர்கள் தங்களது எண்ணங்களை செயலாக்கவும், புதுமையான திறன்களைக் கற்கவும் ஆய்வகம் வழிவகை செய்வதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
3-டி பிரிண்டிங் என்றால் என்ன?
முப்பரிமாண அச்சாக்கம் (3D printing) (சேர்க்கைத் தயாரிப்பு) என்பது முப்பரிமாணப் பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்<1>. எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் எளிமையாக உற்பத்தி செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. உருவாக்க செயல்கூடங்கள் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.