தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மோகம் மீண்டும் திரும்பியுள்ளது. கடந்த ஆண்டு முதல் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு அதிக மவுசு உள்ளது.
பொறியியல் படிப்பவர்களின் பெருங்கனவு நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும், கேம்பஸ் இண்டர்வியூவில் நல்ல நிறுவனத்தில் வேலைப் பெற வேண்டும். இதற்காக முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் அதிகம் விரும்பும் கல்லூரியாக உள்ளது. இது கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அடுத்த இடத்தைப் பெறுகிறது.
இதையும் படியுங்கள்: கிண்டி அண்ணா பல்கலை-யில் என்ஜினீயரிங்: உங்க கட் ஆஃப் இவ்வளவு இருக்கணும்!
இந்தநிலையில், இடஒதுக்கீட்டு பிரிவு வாரியாக எவ்வளவு கட் ஆஃப் இருந்தால், என்ன பிரிவில் எம்.ஐ.டி கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாடப்பிரிவு | OC | BC | BCM | MBC | SC | SCA |
Computer Science and Engineering | 199 | 199 | 198 | 198 | 193 | 185 |
Computer Science and Engineering (SS) | 199 | 198 | 197 | 197 | 191 | 182 |
Electronics and Communication Engineering | 198 | 198 | 195 | 197 | 191 | 178 |
Information Technology (SS) | 198 | 198 | 196 | 196 | 188 | 181 |
Artificial Intelligence and Data Science (SS) | 198 | 197 | 196 | 196 | 189 | 176 |
Electronics and Communication Engineering (SS) | 198 | 197 | 196 | 196 | 189 | 180 |
Electronics and Instrumentation Engineering | 197 | 196 | 192 | 193 | 184 | 178 |
Robotics and Automation (SS) | 196 | 195 | 193 | 193 | 185 | 185 |
Aeronautical Engineering | 195 | 193 | 192 | 190 | 188 | 173 |
Automobile Engineering | 192 | 187 | 180 | 186 | 173 | 165 |
Production Engineering | 189 | 185 | 184 | 182 | 172 | 164 |
Rubber and Plastic Technology | 182 | 171 | 179 | 170 | 157 | 157 |
இதைவிட கட் ஆஃப் 1 முதல் 1.5 மதிப்பெண் வரை குறையலாம். மேற்கூறிய கட் ஆஃப் மதிப்பெண்களை நீங்கள், பெற்றிருந்தால் தமிழ்நாட்டின் இரண்டாம் தரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க தயாராக இருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.