/tamil-ie/media/media_files/uploads/2019/10/au.jpg)
Chennai weather live updates:
Anna university recruitment 2019 vacancies announced : சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் மற்றும் கணக்காளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பி.காம், பிபிஏ, எம்.இ உள்ளிட்ட பட்டம் முடித்தவர்கள் இந்த பணிக்கு வருகின்ற நவம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி : திட்ட உதவியாளர்
பணியிடங்கள் : 2
கல்வி தகுதி : எம்.இ. எச்.டபிள்யூ, ஆர். ஏ, (M.E. HWRE), ஐ.டபிள்யூ.எம். (IWM), ஐ.டபிள்யூ.ஆர்.எம். (IWRM) முடித்திருக்க வேண்டும். மேலும் மென்பொருள் மேலாண்மையையும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 25,000 (Per Month)
பணி : கணக்காளர்கள்
பணியிடங்கள் : 2
கல்வித் தகுதி : பி.காம், பிபிஏ, முடித்துவிட்டு அது தொடர்புடைய துறைகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 12,000
தேர்வு முறை : இவ்விரண்டு பணியிடங்களுக்குமான தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
www.annauniv.edu - என்ற இணையத்தில் இந்த வேலைகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை தரவிறக்கம் செய்து, கேட்கப்பட்டிருக்கும் சான்றிதழ்களின் நகல்கள் அனைத்தையும் இணைத்து சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18/11/2019.
மேலும் படிக்க : தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பிப்பது எப்படி ?
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director,
Centre for Water Resources,
College of Engineering Guindy,
Anna University,
Chennai 600 025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.