Anna University recruitment 2022 invites application for assistants posts apply soon, Anna University Employment Notification, அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! | Indian Express Tamil

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நீர்வளத் துறையில் திட்ட உதவியாளர், கள உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2022

இதையும் படியுங்கள்: தபால் துறை வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Project Co-Ordinator

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : M.E (Water Resources) / M.Sc (Agriculture/ horticulture) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000 – 45,000

Field and Training Co-Ordinator

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : M.E (Water Resources) / M.Sc (Agriculture/ horticulture) / M.A (Rural Development/ Sociology/ Psychology) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000 – 45,000

Project Associate II

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : M.E (Water Resources) / M.Sc (Agriculture/ horticulture) / M.E/M.Tech (Agricultural Engineering/ Horiticulture)/ B.V.Sc & AH படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 28,000 – 35,000

Field Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : M.Sc in Physics/ Biology/ B.E in Civil/ B.Sc /B.Tech (Agricultural Engineering/ Horiticulture)/ B.V.Sc & AH படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

Enumerator

காலியிடங்களின் எண்ணிக்கை – 8

கல்வித் தகுதி : B.E in Civil/ B.Sc /B.Tech (Agricultural Engineering/ Horiticulture) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : B.Sc/ B.Com/ B.A படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000 – 16,000

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/Advertisement_13102022.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Director, Centre for Water Resources, Anna University, Chennai 600025.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Advertisement_13102022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Anna university recruitment 2022 invites application for assistants posts apply soon