அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் தொடர்பான பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு சிறந்த கல்விப் பின்னணி மற்றும் கற்பித்தல் திறன் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
இதையும் படியுங்கள்: SIDBI Bank Jobs: வங்கி வேலை; 100 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
தற்காலிக ஆசிரியர் (Teaching Fellow)
காலியிடங்களின் எண்ணிக்கை – 23
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஏ (தமிழ்), எம்.ஏ (தமிழ்) மற்றும் பி.எச்.டி படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/Temporary%20Teaching%20Fellow%20_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : முனைவர் பா. உமா மகேஸ்வரி, இயக்குநர், பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் (CPDE Building), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25.
மின்னஞ்சல் முகவரி: dirtamildvt@annauniv.edu
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Temporary%20Teaching%20Fellow%20_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil