Advertisment

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; பி.இ, டிப்ளமோ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹார்டுவேர், நெட்வொர்க் எஞ்சீனியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Anna University

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை கிண்டியில் உள்ள ராமானுஜம் கம்ப்யூட்டிங் சென்டரில் ஹார்டுவேர் என்ஜினீயர் மற்றும் நெட்வொர்க் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023

Advertisment

இதையும் படியுங்கள்: சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

Hardware Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ படித்து, 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000 – 30,000

Network Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ படித்து, 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000 – 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLScOlRb8tx-h7ZUONLPssR13Ghm38Hko_D4xFih9fQsOMugbwQ/viewform என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/staff_recruitment_for_RCC_150523.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment