Advertisment

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jobs women

அரசு வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில், அலுவலர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

Centre Administrator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Law Degree/ MSW படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 30,000

Senior Counselor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Law Degree/ MSW படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 20,000

Case Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Law Degree/ MSW படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 15,000

IT Staff

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Graduate with a Diploma in Computers/ IT படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 18,000

Multi-Purpose Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,400

Security Guard/ Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பாதுகாப்பாளராக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/05/2023051930.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : அறை எண் 21, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி 635115.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/05/2023051930.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment