scorecardresearch

AOC Jobs 2022; ராணுவ ஆயுதப் படையில் 419 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

ராணுவ ஆயுதப் படையில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 419 பணியிடங்கள்; டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

AOC Jobs 2022; ராணுவ ஆயுதப் படையில் 419 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

இந்திய ராணுவ ஆயுதப் படையில் பொருள் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய ராணுவ ஆயுதப் படையில் பொருள் உதவியாளர் (Material Assistant ) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 419 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: IB Jobs 2022; உளவுத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 1671 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

Material Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 419

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது Diploma in Material Management or Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 29,200 – 92,300

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் – 50 (English language), திறனறிதல் – 50 (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) – 25, பொது அறிவு -25 (General Awareness) ஆகிய பிரிவுகளில் இருந்து மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவு 2 மணி நேரம் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.aocrecruitment.gov.in/index.html#/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aocrecruitment.gov.in/AOC-PDF/DetailedAdvertisement.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Aoc recruitment 2022 for 419 material assistant posts apply online

Best of Express