scorecardresearch

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 81 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அரியலூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 81 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக நுட்புனர், ஓட்டுனர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 81 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: BHEL Jobs; பெல் நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஆய்வக நுட்புனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 34

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (DMLT) பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வார்டு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

மருத்துவமனை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வண்டி தள்ளுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 19

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : முதல்வர், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/10/2022102075.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Ariyalur health department medical college jobs 2022 apply soon