ஐ.ஐ.டி மெட்ராஸின் ஃபைனான்ஸ் கிளப், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் இணைந்து, ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்காக ஒரு வார கால கட்டுரை எழுதும் போட்டியை நடத்துகிறது.
36வது வால் ஸ்ட்ரீட்டில் நடைபெறும் வருடாந்திர முதன்மை நிதி நிகழ்வின் போது இந்த நிகழ்வு நடைபெறும்.
இதையும் படியுங்கள்: மெட்ராஸ் பல்கலை. செமஸ்டர் ரிசல்ட்; தெரிந்துக் கொள்வது எப்படி?
போட்டி மார்ச் 24 நள்ளிரவில் தொடங்கும், அதில் பங்கேற்பாளர்களுக்கு மூன்று பிரச்சனை அறிக்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் 1,200 முதல் 1,500 சொற்களைக் கொண்ட கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸின் நடுவர்கள் குழு பங்கேற்பாளர்களின் கட்டுரைகளை மதிப்பாய்வு செய்யும். எந்த வகையான பதிப்புரிமை மீறல்கள், கருத்துத் திருட்டு மற்றும் ChatGPTயின் பயன்பாடு ஆகியவை பொறுத்துக்கொள்ளப்படாது. சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை அசலாக இருக்க வேண்டும் மற்றும் இணைந்து எழுதியதாக இருக்கக்கூடாது.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மொத்தம் ரூ.20,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும், முதலிடம் பெறுபவருக்கு ரூ.6,000 மற்றும் இரண்டாம் இடம் பெறுவோருக்கு ரூ.4,000 பரிசும் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.
பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023.
விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் பதிவுகளுக்கு இந்த இணைப்பைப் பின்தொடரவும்: https://unstop.com/competitions/article-writing-competition-36-wall-street-2023-iit-madras-649375
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil