பி.எட் சேர்க்கை தேதி அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

B.ed Degree apply online at www.tngasaedu.in : பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

Upper limit age for teacher recruitment updated tamil news
B.ed Education online application date announced

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணம் :  SC/ST விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம்  செலுத்த வேண்டும். மற்றப் பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை http://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

மேலும்,  care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ( NCTE ) தெரிவித்தது. இந்த முடிவால், ஆசரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு வருடம் என்ற வரம்பைத் தாண்டி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்திருந்தது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: B ed online admission b ed degree apply online at www tngasaedu in

Next Story
அரியர் தேர்வு பிரச்னை: பல்கலைகளுக்கு நீதிமன்றம் தடைTNPSC Annual Planner , TNPSC Exam Notification
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express