தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) - இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ இளங்கலை அளவிலான மருத்துவ படிப்புகளில் சேர இந்திய மாணவர்களுக்கு ஒற்றை சாளர நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஆண்டு, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் ஆகியவையும் நீட் மூலம் மாணவர்களைச் சேர்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை இவைகள் தனித்தனியாக நுழைவுத் தேர்வை நடத்தி வந்தனர்.
ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் நிறுவனங்களுக்கும் மத்திய அரசாங்கம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதால், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை உயரக்கூடும். எனவே, நீட் 2020 கடந்த ஆண்டை விட அதிக போட்டி வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வலர்கள் சாதிக்க விரும்பினால், அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்களது கவனத்தை செலுத்த வேண்டும், மேலும் தேர்வில் வெற்றியடைவதர்கான ஆய்வுகளையும் தொடங்க வேண்டும்.
Advertisment
Advertisements
நவீன் சி ஜோஷி கிரேடப் என்ற தனியார் கல்வி நிறுவனத்தின் (ஜே.இ.இ மற்றும் நீட்) தலைவர் பரிந்துரைத்த புத்தங்கங்கள் சில இங்கே:
உயிரியலைப் பொறுத்தவரை, ஸ்ரீ பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் என்.சி.இ.ஆர்.டி உயிரியல் பூஸ்டரை பின்தொடருங்கள்.
குறைந்த நேரத்தில் பல தலைப்புகளை உள்ளடக்குவதற்காக எம்.டி.ஜி ஆசிரியர் குழுவால் வெளியிடப்பட்ட என்.சி.இ.ஆர்.டி பிங்கர் டிப்ஸ் என்ற புத்தகத்தையும் பின்தொடருங்கள். இந்த புத்தகங்களின் கீழ் உள்ளடக்கப்பட்ட சில தலைப்புகள் என்சிஇஆர்டி புத்தகத்தில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியல் வேதியியலைப் பொறுத்தவரை, செங்கேஜ் பப்ளிகேஷன்ஸ் வழங்கும் 'நீட் தேர்வுக்கான வேதியியல்' புத்தகம் ஒரு நல்ல தேர்வாகும். இது வேதியியல் கோட்பாடு பகுதியை துல்லியமாக விளக்குகிறது.
கரிம வேதியியலுக்கு மோரிசன் மற்றும் பாய்ட் புத்தகம் கருத்தியல் தெளிவுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. கனிம வேதியியலைப் பொறுத்த வரையில், ஓ.பி டாண்டன் எழுதிய 'ஜிஆர்பி கான்செப்ட் ஆஃப் கனிம வேதியியல்' ஒரு சிறந்த வழி.
இயற்பியலில், எச்.சி வர்மா இயற்பியல் புத்தகம் படிக்கப்படவேண்டிய ஒன்று. இயற்பியலில் நல்ல மதிப்பெண்களைப் தினசரி பயிற்சி கணக்குகளை தீர்ப்பதன் மூலம் எடுக்கலாம். திஷாவின் 32 வருடங்கள் நீட் தேர்வு பாடப்பிரிவு வாரியாக & தலைப்பு வாரியாக தீர்க்கப்பட்ட இயற்பியல் கேள்விகள் என்ற புத்தகம் உங்களை தேர்வுக்கு தயாராக்கும் ஒரு புத்தகம்.
ஓஸ்வால் புக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் ஜெயின் , கல்வி வெளியீட்டாளரான இவர் பரிந்துரைக்கப்பட்ட சில புத்தங்கங்கள்
- ஓஸ்வால் புத்தகத்தின் முந்தைய 32 ஆண்டுகள் ஆண்டு கேள்வி பதில்கள்
-ஆலன் நீட் தேர்வு புத்தகம்
- கேரியர்பாய்ன்ட் வெளியிடும் நீட்தேர்வுக்கான 10 மாக் டெஸ்ட் .-GKP வெளியிடும் 20 NEET பயிற்சி
நாராயண சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொது மருத்துவம் ஆலோசகராக இருக்கும், டாக்டர் செவ்கத ராய்சவுத்ரி பின்வரும் புத்தகங்களை பரிந்துரைத்தார்:
நமது அடிப்படை அறிவை தெளிவாக்க என்சிஆர்டி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் மிகவும் முக்கியம். வேட்பாளர்கள் உயிரியல் பிரிவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், அடிப்படைக் கருத்துகளைக் கொண்ட மற்றும் கட்டாயம் படிக்க வேண்டிய சில புத்தகங்கள் - ட்ரூமேனின் உயிரியல் தொகுதி 1 மற்றும் 2, தினேஷின் அப்ஜெக்டிவ் பயாலஜி , மற்றும் அன்சாரி எழுதிய அப்ஜெக்டிவ் பாட்டனி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news