பி.எஸ்.என்.எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இன்ஜினியரிங் அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11705 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதையும் படியுங்கள்: அழகப்பா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (Junior Telecom Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை - 11705
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு சார்ந்த பிரிவில் இன்ஜினியரிங் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ.16,400 – 40,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அறிவிப்பு வெளியான பின்னர், மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு இந்த இணையதளப் பக்கத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil