பல வாரியங்கள் தங்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்துள்ள நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மாணவர்களும் தேர்வு முடிவு தேதிக்காகக் காத்திருக்கின்றனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10வது மற்றும் 12வது தேர்வு முடிவுகள் 2023 வெளியிடுவதற்கான சரியான தேதி மற்றும் நேரத்தை அடுத்த வாரம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை வாரியம் ஒரே நாளில் வெளியிடுமா என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
கிட்டத்தட்ட 38,73,710 மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். சி.பி.எஸ்.இ வாரியம் இன்னும் ரிசல்ட் அறிவிப்பு தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், அது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம். அவை www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.cbseresults.gov.in மற்றும் www.cbse.gov.in.
இதையும் படியுங்கள்: TN 10th Results Date: தமிழ்நாடு 10-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி; அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்
உங்கள் CBSE 10வது முடிவு 2023 மற்றும் CBSE 12ஆம் வகுப்பு முடிவுகள் 2023ஐச் தெரிந்துக்கொள்ள, கொடுக்கப்பட்ட முடிவு உள்நுழைவு சாளரத்தில் உங்கள் ரோல் எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு ஐ.டி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
இந்த ஆண்டு, CBSE 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வை பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடத்தியது. CBSE 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற்றது. CBSE முடிவை அறிவிக்கும் போது, ஒட்டுமொத்த, பாலினம், பள்ளி, மண்டலம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒவ்வொரு வகுப்பிற்கும் தேர்ச்சி சதவீதத்தை வாரியம் அறிவிக்கும்.
முன்னதாக 2022 இல், வாரியம் தேர்வை இரண்டு தவணை/ செமஸ்டர்களில் நடத்தியது. 2022 ஆம் ஆண்டில் மாணவிகளின் செயல்திறன் 2021 ஐ விட சற்று குறைவாக இருந்தது, ஆனால் இது 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.21 சதவீதமாக உள்ளது, 2021 தேர்ச்சி சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில், மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.80% ஆகும். ஆண்களை விட பெண்கள் 1.41% அதிகமாக உள்ளனர்.
2021ல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.24 சதவீதம். 2021ல் தேர்ச்சி பெற்ற பெண்களின் சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொடிய கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக வாரியம் தேர்வை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 99.04 சதவீதம் என்ற அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 98.89% ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளின் தேர்ச்சி சதவீதத் தரவை வைத்துப் பார்த்தால், மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.14% ஆகும். 2020 ஆம் ஆண்டில் மாணவிகளின் செயல்திறன் 93.31% தேர்ச்சியுடன் மீண்டும் அதிகமாக இருந்தது. கோவிட் காரணமாக, CBSE 2020 தேர்வுகளை ரத்து செய்தது, மேலும் மாணவர்களை மதிப்பிடுவதற்கு மாற்று மதிப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளின் தேர்ச்சி சதவீதத் தரவை வைத்துப் பார்த்தால், 2019ல் மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.14% ஆகும். அதேநேரம் 2018ல் மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 85.32% பதிவாகியுள்ளது. மாணவிகளின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 88.67%. 2019 ஆம் ஆண்டில் CBSE 10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 92.45% ஆகும். அதாவது, 2018ம் ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை விட 2019ம் ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் சுமார் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.