மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேர்ச்சி அளவுகோல் மற்றும் கருணை மதிப்பெண்கள் திட்டத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 மே மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி அறிக்கைகளின்படி, CBSE தேர்வு முடிவுகள் மே 13 மற்றும் மே 25 க்கு இடையில் வெளியிடப்படலாம். முடிவுகள் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம். அவை www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.cbseresults.gov.in மற்றும் www.cbse.gov.in.
இதையும் படியுங்கள்: பொறியியல், அறிவியல் மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி; எல்&டி உடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்
உங்கள் CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தெரிந்துக்கொள்ள, கொடுக்கப்பட்ட முடிவு உள்நுழைவு சாளரத்தில் உங்கள் ரோல் எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு ஐ.டி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
CBSE 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கான அளவுகோல்கள்
வாரிய வழிகாட்டுதல்களின்படி, சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் மாணவர்கள் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இந்த 33 சதவீதம் 5 முக்கிய பாடங்கள் அல்லது 4 பாடங்கள் மற்றும் 1 விருப்ப பாடத்தை உள்ளடக்கியது.
மேலும், 33 சதவீத மதிப்பெண்களில் உள் மதிப்பெண்கள் மற்றும் வெளிப்புற அல்லது எழுத்துத் தேர்வில் செயல்திறன் ஆகிய இரண்டும் அடங்கும். அதாவது, மொத்த 100 மதிப்பெண்களுக்கு மொத்தம் 33 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எனவே, அவர்கள் உள் தேர்வில் 20 மதிப்பெண்கள் எடுத்திருந்தால், தேர்வில் தேர்ச்சி பெற எழுத்து தேர்வு தாளில் 13 மதிப்பெண்கள் தேவை.
CBSE கிரேடு மதிப்பெண்கள் முறை
சி.பி.எஸ்.இ ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடையும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை வழங்கி வருகிறது. எவ்வாறாயினும், எத்தனை மதிப்பெண்கள் மற்றும் எத்தனை பாடங்களில் வழங்கப்படும் என்பதற்கு நிலையான கொள்கை எதுவும் இல்லை. மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படலாம். இந்த அடிப்படையில் சில மாணவர்களுக்கு 7 மதிப்பெண்கள் வரை வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த மதிப்பெண்கள் கவனமாக பரிசீலித்து மதிப்பெண்களை இயல்பாக்கிய பின்னரே வழங்கப்படும். ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற முடியாமல் போகும் மாணவர்களுக்கு இந்த கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil