சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளில் எப்போது நார்மலைஸேசன் செய்யப்படும், அதனால் எப்படி மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளில் தரவரிசையின்போது நார்மலைஸேசன் செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நார்மலைஸேசன் என்பது என்ன? எப்போது செய்யப்படும்? எவ்வளவு மதிப்பெண்கள் உயரும் என்பதை இப்போது பார்ப்போம்.
இதுதொடர்பாக கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளில் நார்மலைஸேசன் என்பது தேசிய அளவில் செய்யப்படும். இது ரேங்கிங் என்ற தரவரிசைப்படுத்தலுக்காக செய்யப்படும் நடைமுறை. அதே நேரம் தகுதி நடைமுறைக்கு நார்மலைஸேசன் பொருந்தாது.
பொதுவாக சி.பி.எஸ்.இ தேர்வுகளில் ஒரு பாடத்தில் இந்திய அளவில் ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துவிட்டால் நார்மலைஸேசன் செய்யப்படாது. அதேநேரம் எந்த மாணவரும் 100க்கு எடுக்காமல் இருந்தால் நார்மலைஸேசன் செய்யப்படும்.
உதாரணமாக ஒரு பாடத்தில் மாணவர்கள் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்கள் 100க்கு 90 எனில், அந்த 90 மதிப்பெண் 100க்கு கணக்கிடப்படும். அதாவது 90 மதிப்பெண் எடுத்தவருக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும். அதேநேரம் 60 மதிப்பெண் எடுத்தவருக்கு, அதனை 100க்கு கணக்கிட்டு நார்மலைஸேசன் மதிப்பெண் 66.66 ஆக வழங்கப்படும். இப்படியாக ஒவ்வொரு மாணவருக்கும் அவர் எடுத்த மதிப்பெண்களை 100க்கு கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு ரமேஷ்பிரபா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil