CBSE 10th, 12th practical exam 2020 date sheet, timetable: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு, 12 நடைமுறைத் தேர்வுகளுக்கான(பிராக்டிக்கல் தேர்வு ) தேதியை வெளியிட்டது. அதிகாபூர்வ அறிவிப்பின் படி, 2020ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை இந்த நடைமுறைத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடைமுறை தேர்வு , ப்ராஜக்ட் அசஸ்மெண்ட் போன்றவைகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். இருப்பினும் எக்ஸ்டர்னல் எக்ஸாமினர், இன்டர்னல் எக்ஸாமினர் தேர்வறையில் இருப்பார்கள். வாரியம் சார்பில் எக்ஸ்டர்னல் எக்ஸாமினரும், ஒரு பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.
எக்ஸ்டர்னல் எக்ஸாமினர், இன்டர்னல் எக்ஸாமினர், தேர்வெழுதும் மாணவர்கள் அடங்கிய புகைப்படத்தை எடுத்து அதை வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றும்படி சிபிஎஸ்சி வாரியம் அந்தந்த பள்ளிகளுக்கு அறிவுருத்தியுள்ளது. வாரிய நடைமுறைத் தேர்வு நடைபெறும் அதே ஆய்வகத்தில் இந்த புகைப்படத்தைக் கிளிக் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அசஸ்மென்ட் தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு சிபிஎஸ்இ பள்ளிகளும் மதிப்பெண்ணை வாரியம் ஏற்படுத்தியுள்ள போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்யும் போது பள்ளிகள் மிகவும் கவனமாக செயல்படவேண்டும் என்றும் வாரியம் அறிவுருத்தியுள்ளது.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ வகுப்பு 10, 12 தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு, தேர்வுகள் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கியது என்பது குறிபிடத்தக்கது.