சென்னை ஆவடி டி.ஆர்.டி.ஓ (DRDO) நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும், இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் ஒரு அங்கமான ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (CVRDE) தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!
காலியிடங்களின் விவரம்
Graduate Apprentices
Computer Science and Engineering - 10
Electrical and Electronics Engineering – 6
Electronics and Communication Engineering – 8
Mechanical Engineering – 8
Library Science – 2
Automobile Engineering – 6
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
Technician (Diploma) Apprentices
Computer Science and Engineering - 4
Electrical and Electronics Engineering – 4
Electronics and Communication Engineering – 4
Mechanical Engineering – 4
Library Science – 1
Automobile Engineering - 3
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000
வயது தகுதி: 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினர் 30 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 32 வயது வரையிலும், PWD பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2022
மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2022/11/CVRDE_Avadi_Chennai_Notification_2022_23.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil