scorecardresearch

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தப்பட்ச கல்வித் தகுதி முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: நில அளவை உரிமம் பெற பயிற்சி வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கணினி தரவு உள்ளீட்டாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

ஊர்தி ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

Technical Coordinator (IT)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in ECE/ CSE/ IT/ B.Sc (Computer Science)/ BCA படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,000

பல் மருத்துவ உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

பல் மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 34,000

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

வயது தகுதி: 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி – 628002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Thoothukudi health department jobs 2022 apply soon