Advertisment

BHEL Jobs; பெல் நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் உள்ள பெல் நிறுவனத்தில் டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BHEL jobs

பெல் நிறுவன வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூன் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) நிறுவனத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Engineers

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Bachelor’s Degree in Engineering/Technology in Civil Engg படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்; ரூ. 82,620

Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்; ரூ. 46,130

வயது தகுதி: 01.05.2023 அன்று 34 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pssr.bhel.com  or https://careers.bhel.in  என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை பதிவு செய்த பின்னர், பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Addl. General Manager (HR) BHEL, Power Sector Southern Region, BHEL Integrated Office Complex TNEB Road, Pallikaranai, Chennai – 600100

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.06.2023

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200, இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://careers.bhel.in/bhel/static/English%20Advertisement%20FTA%202023_PSSR.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Bhel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment