சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 58 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு அரசு வேலை; டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 39
கல்வித் தகுதி : B.Sc. Nursing (4 years) or Diploma in Nursing or Diploma in General Nursing and Midwife படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/gcc/pdf/Advertisment%20and%20Application%20Form%20for%20MO.pdf என்ற இணையதள பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Member Secretary, Chennai City Urban Health Mission Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/Advertisment%20and%20Application%20Form%20for%20MO.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil