டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வுக்கு இலவச பயிற்சி, சென்னை கலெக்டர் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்ரவரி 3ம் தேதி )முதல் ஆரம்பிக்கப்படுகின்றன

tnpsc exam free camp,TNPSC Group I Exam free Class, District Employment office
tnpsc exam free camp,TNPSC Group I Exam free Class, District Employment office

அரசு பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவா்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘தன்னார்வ பயிலும் வட்டம்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: மாநிலத்தில் 3-வது இடம் பிடித்தவர் கைது

இத்தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தோ்வு எழுதும் இளைஞா்கள் வேலைநாடுநா்கள் உறுப்பினா்களாக அனுமதிக்கப்படுகின்றனா். இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் (பிப்ரவரி.3) ஆரம்பிக்கப்படுகின்றன.

சென்னை சாந்தோமில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கும்.

நீட் பிஜி தேர்வு 2020 : தகுதி பட்டியலில் தமிழ்நாடு முதிலிடம்

ஆர்வமுள்ள தேர்வர்கள், 044 24615160 என்ற எண்ணத் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முகவரி:

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai district employment offering free tnpsc coaching class santhome feb 3

Next Story
நீட் பிஜி தேர்வு 2020 : தகுதி பட்டியலில் தமிழ்நாடு முதிலிடம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com