Advertisment

சென்னை ராணுவ மருத்துவ மனையில் வேலை; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னையில் உள்ள ராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை ராணுவ மருத்துவ மனையில் வேலை; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

ராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு (புகைப்படம்: ECHS இணையதளம்)

சென்னையில், முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (Ex Serviceman Contributory Health scheme - ECHS) ஓட்டுனர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,700

Safaiwala

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,800

வயது தகுதி: 01.06.2022 அன்று 20 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://echs.gov.in/img/Application%20Form.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: OIC, Station HQ, (ECHS Cell), Tambaram.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.03.2023

மேலும் விவரங்களுக்கு https://echs.gov.in/advertisement/RC%20Chennai.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment