Advertisment

HVF Jobs; ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 214 பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

சென்னை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 214 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
heavy vehicles jobs

ஆவடி தொழிற்சாலை வேலைவாய்ப்பு

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 214 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகனத் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஹெச்.வி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 214 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: திருவாரூர் மத்திய பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Graduate Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 104

Mechanical Engineering - 50

Electrical & Electronics Engineering - 10

Computer Science and Engineering - 19

Civil Engineering – 15

Automobile Engineering – 10

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை; ரூ. 9,000

Technician (Diploma) Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 110

Mechanical Engineering - 50

Electrical & Electronics Engineering - 30

Computer Science and Engineering - 07

Civil Engineering – 05

Automobile Engineering – 18

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 8,000

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், HEAVY VEHICLES FACTORY என தேடுதல் மெனுவில் டைப் செய்து விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைனில் நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.05.2023

மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/04/HVF_Notification_2023_24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment