Advertisment

சென்னை டி.சி.எஸ் நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான அருமையான வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
Oct 26, 2022 12:10 IST
New Update
சென்னை டி.சி.எஸ் நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிப்பது எப்படி?

முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TATA Consultancy Services). இது டி.சி.எஸ் (TCS) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகளை வைத்துள்ளது. சென்னையிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.

இதையும் படியுங்கள்: அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

தற்போது சென்னையில் உள்ள டி.சி.எஸ் நிறுவன கிளைகளில் பணிபுரிய இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த முழு விபரங்களை இப்போது பார்ப்போம்.

பணியின் பெயர் : Big Data Developer

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இன் ஜினியரிங் படித்திருக்க வேண்டும். மேலும் 4 முதல் 6 ஆண்டுகள் Big Data Developer பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அனுபவத்திற்கேற்ப சம்பளம் அதிகமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ibegin.tcs.com/iBegin/jobs/248723J என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ibegin.tcs.com/iBegin/jobs/248723J என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai #Jobs #Tcs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment