scorecardresearch

11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் பட்டியல் செப். 15 முதல் பள்ளிகளில் வழங்கப்படும் – தேர்வுத் துறை

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் 15 முதல் பள்ளிகளில் வழங்கப்படும் – அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு

11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் பட்டியல் செப். 15 முதல் பள்ளிகளில் வழங்கப்படும் – தேர்வுத் துறை

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குனரகம், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. மேலும், SSLC துணை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் வெளியிடுவது குறித்து தெரிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TNEA பொறியியல் கவுன்சலிங் தற்காலிக ஒதுக்கீடு வெளியீடு; அடுத்து என்ன செய்ய வேண்டும்?

அதன்படி, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும். அதாவது, நாளை முதல் அனைத்து மாணவர்களும் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனி தேர்வர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் 11வது, 12வது மதிப்பெண் பட்டியலை அந்தந்த தேர்வு மையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலைப் பெறுவதில் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க அனைத்து மாணவர்களும் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முடிவுகள் ஆன்லைனில் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகளிலும் தெரிந்துக் கொள்ளலாம். ​​ஏதேனும் காரணங்களால் ஆன்லைனில் தேர்வு முடிவுகளைப் பெற முடியாத மாணவர்கள், பள்ளிகளில் தங்களின் 11ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் இருந்து பெற்றவுடன், எதிர்கால தேவைகளுக்காக அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதிப்பெண் பட்டியல் தொடர்பாக ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், https://tnresults.nic.in/ மற்றும் https://dge.tn.gov.in/ என்ற தமிழக அரசு தேர்வு இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Class 11 and 12 students can get original mark sheet from september 15

Best of Express