கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் உள்ள நலவாழ்வு மையங்களில் மருத்துவமனைப் பணியாளர் (Health Worker/ Support Staff) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
மருத்துவமனைப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 26
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/02/2023020473.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 219, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.05.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/05/2023051778.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil