கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: ISRO Jobs: இஸ்ரோ வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
பல் மருத்துவர் (Dental Surgeon)
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BDS படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 34,000
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 13,800
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/11/2022112135.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 18.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/11/2022112242.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil